
இந்தியாவின் பரபரப்பான அரசியல் சூழலில் நடந்து முடிந்துள்ள நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்குகின்றது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் முடிவுகள் எதிர்பார்க்கப்படுவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. மேலும் ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடந்த நிலையில் மிசோரம் மாநிலத்திற்கு மட்டும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.