உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களிடமிருந்து அரசு நேரடியாக தானம் பெற்று உறுப்புகள் தேவைப்படுபவருக்கு கொடுக்கிறது. உடல் உறுப்புகள் செயலிழக்கும் பொழுது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து அந்த உறுப்பை புதுப்பித்துக் கொள்ளும் அளவிற்கு மருத்துவ தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இதயம்,. நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம், கண்கள், கைகள் உள்ளிட்ட பல உறுப்புகளை தானமாக பெற முடியும்

இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் மூளைச் சாவு அடைந்த 4 நாள் சிசுவின் உடலுறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. அக்.13-ல் பிறந்த குழந்தையிடம் எந்த அசைவும் இல்லாததால் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து, 2 சிறுநீரகம், 2 கருவிழி, கல்லீரல், மண்ணீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. நாட்டிலேயே சிசுவிடம் இருந்து உறுப்பு தானம் பெறப்பட்டது இதுதான் முதல்முறை என கூறப்படுகிறது.