சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரி பராமரிப்பு பணிகள் மற்றும் தண்டவாளம் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் சென்னைக்கு வரும் 8 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல நான்கு ரயில்கள் இந்த பகுதியில் பகுதி அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி காலை 6:20 மணிக்கு புறப்படும் கோவை – சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 11, 18, 25 மற்றும் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி ஆகிய நான்கு நாட்கள் காட்பாடி வரை மட்டுமே செல்லும். நான்கு நாட்களும் பகுதியாகவே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மறுமாக்கத்தில் சென்னைக்கு பதிலாக மாலை 4:20 மணியளவில் காட்பாடியில் இருந்து ரயில்கள் புறப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.