தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பொதுக்குழு கூட்டத்தில் திமுக மற்றும் பாஜக கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசினார். மேலும் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கு இடையே தான் போட்டி. ஒன்று தமிழக வெற்றிக் கழகம். மற்றொன்று திராவிட முன்னேற்ற கழகம் என நேரடியாக பேசினார்.

அவரது பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களை உற்சாகப்படுத்துக விஜய் அப்படி கூறி இருக்கிறார் என விமர்சித்தார். தற்போது அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி கூறியதாவது, விஜய் இன்னும் மக்களை சந்திக்கவில்லை. 4 சுவற்றுக்குள் 2 வருட அரசியலை முடித்துவிட்டார் என விமர்சித்துள்ளார்.