உலகம் முழுவதும் 4 கோடி மக்கள் எச்ஐவி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகம் முழுவதும் சுமார் 4 கோடி மக்கள் எச்ஐவி நோய் பாதிப்புடன் வாழ்ந்து வருவதாகவும் அதில் 90 லட்சம் மக்கள் எந்த சிகிச்சையும் எடுக்காமல் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் 6.3 லட்சம் மக்கள் எய்ட்ஸ் தொடர்பான நோயினால் உயிரிழந்திருப்பதாகவும் வருகின்ற 2025 ஆம் ஆண்டில் இதுத்தொடர்பான உயிரிழப்புகள் 2.5 லட்சமாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முறையில் முன்பை விட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் ஒரு ஊசி மூலம் 6 மாதம் வரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.