4 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில்  குஜராத், குவஹாத்தி, திரிபுரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 4 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சோனியா கிரிதர் கோகனி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தி ஐகோர்ட் தலைமை நீதிபதியாக சந்தீப் நேதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் திரிபுரா தலைமை நீதிபதியாக ஜஸ்வந்த் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் & லடாக் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கோட்டீஸ்வர் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை நீதிபதிகளுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய அரசியலமைப்பின் கீழ் தொடர்புடைய விதிகளின்படி, பின்வரும் நீதிபதிகள் வெவ்வேறு உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.