இந்திய ரயில்வே இப்போது ரத்துசெய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளுக்குரிய பணத்தை திரும்பப் பெறுவதற்கான புது விதிகளை வெளியிட்டு உள்ளது. அங்கீகாரம் இல்லாதவர்கள் (அ) ஸ்கிரிப்டிங் வாயிலாக முன் பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை பணத்தைத் திரும்ப பெறாமல் வெளியிடலாம் என ரயில்வேத் துறை அறிவிப்பில் தெரிவித்து உள்ளது.

ஐஆர்சிடிசி-ல் ரயில் இ-டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது உரிய மொபைல் நம்பரை வழங்கவேண்டும். இதனிடையே ரயில் இ-டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது மொபைல் எண்ணை சரியாகப் பதிவு செய்திருப்பதை உறுதி செய்யவும். ஐஆர்சிடிசி அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மட்டுமே வாடிக்கையாளருக்கு ரயில் இ-டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

GST நடைமுறைபடுத்துவதற்கு முன்பே டிக்கெட் வாங்கி இருந்தால் பணத்தை திரும்பப்பெறும் விதியின் படி செலுத்தவேண்டிய தொகை பயணிகளுக்கு திருப்பியளிக்கப்படும். எனினும் முன்பதிவு செய்யும்போது வசூலிக்கப்படும் சேவை வரியின் மொத்த தொகையும் பயணிகளுக்கு பணமாகத் திருப்பித் தரப்படாது. ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பின் டிக்கெட் வாங்கி ரத்துசெய்தால், வாங்கும்போது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.