பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் மாவட்டத்தில் அவ்னீஸ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஆசிரியர் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். தற்போது அவ்னீஸ் குமார் கதிகார் மாவட்டத்தில் இருக்கும் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் சொகுசு காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் அவ்னீஷ் குமாரை கடத்தி சென்றுள்ளனர்.

அதன்பிறகு குன்சன் என்ற பெண்ணுக்கு துப்பாக்கி முனையில் மிரட்டி கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். அவ்னீஸ் குமார் 4 ஆண்டுகள் தன்னுடன் பழகி ஏமாற்றியதாக அந்த பெண் கூறியுள்ளார். ஆனால் அந்த குற்றச்சாட்டை அவ்னீஸ் மறுத்துள்ளார். மேலும் திருமணம் முடிந்த கையோடு அவர் அங்கிருந்து தப்பி சென்றார். அவ்னீஸ் குமாரும், பெண்ணும் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.