
ஓசூர் அருகே உள்ள பள்ளியில் நித்தின் என்ற மாணவன் 3-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுவன் மதிய உணவு இடைவேளையின் போது பள்ளிக்கூடத்திற்கு அருகே உள்ள விவசாய நீர் சேமிப்பு தொட்டியில் அமர்ந்துள்ளார். அப்போது அவர் நிலை தடுமாறி தொட்டியில் விழுந்தார்.
இதை பார்த்த மற்றொரு மாணவர், தலைமை ஆசிரியர் சங்கர் ராஜாவிடம் சென்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அச்சிறுவனை காப்பாற்ற அவரும் அந்த தொட்டியில் குதித்துள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.