கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆவாரம்பாளையம் பகுதியில் அங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு 36 வயது ஆகும் நிலையில் இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் மற்றும் பெற்றோர் பல இடங்களில் பெண் பார்த்தும் வரன் அமையவில்லை. இதனால் பிரகாஷ் வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். இந்நிலையில் சம்பவ நாளில் மதுவில் விஷம் கலந்து பிரகாஷ் குடித்துவிட்டார்.

பின்னர் நடந்த விவரங்களை செல்போன் மூலமாக தன் நண்பர்களிடம் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக அங்கு சென்று ஆம்புலன்ஸ் மூலமாக பிரகாஷை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வாலிபர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.