துருக்கியின் கிழக்கு பகுதியில் மீண்டும் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. ரிக்ட்டர் அளவில் நேற்று நிலநடுக்கம் 5.7 ஆக இருந்தது. துருக்கியில் இப்படி அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் விலக்கியுள்ளனர். துருக்கி கடந்த 24 மணி நேரமாக எதிர்கொள்ளும் பேரலை வை இதுவரை உலக நாடுகள் எதுவுமே எதிர்கொண்டதில்லை. மொத்த துருக்கி நாட்டையும் அங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் உலுக்கி போட்டு உள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000 கடந்துள்ளது. இந்நிலையில் துருக்கியில் கடந்த 36 மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் 4 மற்றும் அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவுகளில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 81 முறை 4 ரிக்டர் அளவிலும், மூன்று முறை ஆறு ரிக்டர் அளவிலும், 2 முறை 7 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது.