உலக வெப்பமயமாதல் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. உலகில் வெப்பநிலை ஒவ்வொரு ஆண்டும் 1.4 டிகிரி பாரன்ஹீட் அதிகரிக்கிறது. இதனால் எந்த நேரமும் பஞ்சமோ அல்லது உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர். அப்படியான சூழல் ஏற்பட்டால் இந்த வெப்பமான உலகை காக்கும் உணவாக பொய் வாழை இருக்கும் என அறிவியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பொய் வாழை என்றால் எத்தியோப்பியாவில் வளரும் என்ஹெஜெட் என்ற உணவு காரணி ஆகும். இது ஏன் பொய் வாழை என அறியப்படுகின்றது என்றால் ஹெப்சைட் எத்தியோப்பியாவில் மட்டுமே பயிரிட்டு வளர்க்கப் படுகிறது. இது பார்ப்பதற்கு வாழை மரத்தை போலவே இருக்கிறது. அதே இலை, அதே தண்டு ஆனால் இவைகள் வானத்தை நோக்கியதாக இருக்கிறது. இதனால் தான் இதனை பொய் வாழ என அழைக்கின்றனர்.

இந்த தாவரம் 10 மீட்டர் உயரம் வரை வளரும். 15 மரங்கள் இருந்தால் ஓராண்டு முழுவதும் ஒரு மனிதருக்கு உணவு அளித்திட முடியும். இதனை எக்காலத்திலும் பயிரிடலாம். நீண்ட காலத்துக்கு பாதுகாத்து வைக்க முடியும். எளிதில் நோய்வாய்ப்படாது என இதன் பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதனை எத்தியோப்பியாவில் மக்கள் பசிக்கு எதிரான மரம் என அழைக்கின்றனர். இதில் சில தாவரங்கள் நச்சுத்தன்மை கொண்டதாக இருக்க வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஆப்பிரிக்கா மக்களின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக இருக்கும். கென்யா, உகண்டா, ரெபாடா உள்ளிட்ட நாடுகள் எத்தியோப்பியா போல என்ஹெஜெட் உற்பத்தி செய்து அதனை உட்கொண்டு வருகின்றனர்.