துருக்கியில் 36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கங்கள் பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது. துருக்கி சிரியா எல்லையில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்பகுதியை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என கூறப்படுகின்றது.

ரெக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் காரணமாக துருக்கியில் 7108 பேரும் சிரியாவில் 2530 பேரும் என மொத்தம் 9630 பேர் உயிரிழந்து உள்ளதாக அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரெக்டர் அளவுகளில் 100க்கு மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

கடந்த 36 மணி நேரத்தில் அவை நிகழ்ந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரிய நிலநடுக்கத்தை தொடர்ந்து அதே பகுதியில் ஏற்படும் சிறிய நிலநடுக்கங்களே பின் அதிர்வுகள் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அது தொடர்பான வரைபடங்கள் வெளியாகி உள்ளன.