வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் மாவட்டச் செயலாளருமான எல்.கே.எம்.பி.வாசு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் முனிசிபல் காலனியைச் சேர்ந்த எல்.கே.எம்.பி.வாசு, அ.தி.மு.க-வில் நீண்ட கால அனுபவம் கொண்டவர். இவரது அரசியல் பயணம் பின்வருமாறு:
1991: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணி செயலாளர்.
1996: வேலூர் நகரசபை அ.தி.மு.க. குழுத் தலைவர்.
2006 – 2010: வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர். (அப்போது வேலூர், காட்பாடி, குடியாத்தம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 தொகுதிகள் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் கீழ் இருந்தன).
2009: வேலூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்.
2017: அகில உலக எம்.ஜி.ஆர் மன்றத் துணைச் செயலாளர். போன்ற பதவிகளை வகித்தவர்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து எல்.கே.எம்.பி.வாசு அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது விஜய்க்கு எம்.ஜி.ஆர் குறித்த புத்தகத்தை அவர் நினைவுப் பரிசாக வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், த.வெ.க வேலூர் மாவட்டச் செயலாளர் வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் வேலூர் மாவட்டத்தின் மூத்த அரசியல் பிரமுகர் ஒருவர் த.வெ.க-வில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.