மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டதொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல வருடங்களாக நிலுவையில் உள்ள மசோதா மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்கள் சட்டசபைகளிலே 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும். நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே இந்த மசோதா நாடாளுமன்றத்தின் தாக்கல் செய்யப்பட்டு,  மாநிலங்களவையின் ஒப்புதலையும் பெற்றது.

ஆனால் அதற்கும் பிறகு இந்த மசோதாவுக்கு ஒரு சில கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன்  காரணத்தால் நிறைவேறாமல் இதுவரை நிலுவையில் உள்ளது. அந்த மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டு வந்து,  மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாளை புதிய நாடாளுமன்றத்திற்கு இடம் மாறும் நிகழ்வு நடைபெற இருக்கிறது. புதிய வளாக கட்டடத்துக்கு  இந்த மசோதாவை தாக்கல் செய்து அதற்கு ஒப்புதல் பெறுவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது.