தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இந்நிலையில் நடிகர் அஜித் திரைத்துறைக்கு வந்து தற்போது 32 வருடங்கள் ஆகிவிட்டது. இதனை கொண்டாடும் விதமாக அவர் நடித்து வரும் குட் பேட் அக்லி படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்று வெளியிட்டுள்ளனர்.
இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும் நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி மற்றும் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி ஆகிய திரைப்படங்களில் நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.