தமிழ்நாட்டியே உலுக்கிய கோகுல்ராஜ் ஆவண கொலை வழக்கில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேரின் சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாகவே அனைத்து பாய்ண்டுகளும் இருந்த நிலையில் 3 பாய்ண்டுகள் தான் அவர்களை சிக்க வைத்துள்ளது. இதுகுறித்து கோகுல்ராஜ் கொலை வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்களில் ஒருவரான மோகன் கூறுகையில், கோகுல்ராஜ் தற்கொலை செய்து கொண்டது போன்று தான் வழக்கில் அனைத்து விதமான அம்சங்களும் இருந்தது.

கோகுல்ராஜ் தோழியான சுவாதியும் கடைசி நேரத்தில் பிறழ் சாட்சியாக மாறியது குற்றவாளிகளுக்கு சாதகமாகவே அமைந்தது. இந்நிலையில் கோகுல் ராஜை பிரேத பரிசோதனை  செய்த மருத்துவர் அதை சிசிடிவி பதிவு செய்து வைத்துள்ளார். இதில் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. சாட்சி பொய் சொல்லும் சாட்சியம் பொய் சொல்லாது என்பது இரண்டாவது முக்கிய பாயிண்டாக அமைந்தது‌. அதன்பிறகு ஒரு தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற யுவராஜ் கோகுல்ராஜ் செல்போனை பிடுங்கியதை தற்செயலாக ஒப்புக்கொண்டதும் வழக்கில் முக்கியமான ஆதாரமாக மாறியது. மேலும் இந்த 3 பாயிண்ட்கள்தான் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளை சிக்க வைத்துள்ளது.