
பீகார் மாநிலத்தின் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது மருமகளை திருமணம் செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமன் என்ற அந்த பெண் தனது கணவரை விட்டுவிட்டு தனது மருமகள் ஷோபாவோடு தலைமறைவாகி திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களது திருமணம் உள்ளூர் கோயிலில் நடைபெற்றுள்ளது.
இந்த திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த திருமணத்தை சிலர் பாராட்டியுள்ள நிலையில், மற்றவர்கள் கண்டித்துள்ளனர். சமூகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் ஒரே பாலினத் திருமணங்கள் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.