
மராட்டிய மாநிலத்தில் கங்காகோத் நகரில் உத்தம் காலே (32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மொய்னா என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள். இதில் மொய்னா மூன்றாவது கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. இதனால் அவருடைய கணவருக்கு கோபம் வந்த நிலையில் அடிக்கடி மனைவியுடன் தகராறு ஈடுபட்டு வந்தார். இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை மீண்டும் வாக்குவாதம் வந்தது.
இதில் கோபமடைந்த கணவர் தன் மனைவி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டார். இதில் அந்த பெண் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடி வந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாக இறந்த பெண்ணின் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் அந்த பெண்ணின் கணவரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது