ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று டெல்லி அணியிடம் சொந்த மண்ணில் தோல்வியடைந்தது. சென்னை அணி தனது சொந்த மண்ணில் தொடர்ச்சியாக சந்தித்த இரண்டாவது தோல்வி இதுவாகும். இந்த சீசனில் மூன்றாவது தோல்வியும் இதுவாகும். சென்னை அணி டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தோல்வியடைந்ததை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த ஏமாற்றத்தில் காணப்பட்டார்.   ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த மூன்று போட்டிகளில் ஆட்டம் எங்களுக்கு சாதகமாக இல்லை என்று கூறியுள்ளார்.

போட்டிக்குப் பிறகு ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில், “கடந்த சில போட்டிகளில் நாங்கள் முன்னேற முயற்சித்து வருகிறோம், ஆனால் அது நடக்கவில்லை.. பவர்பிளே எங்களுக்கு சரியாகப் போகவில்லை. பவர்பிளேயில் பந்துவீசும்போது நாங்கள் 15-20 ரன்கள் அதிகமாகக் கொடுக்கிறோம். மேலும், பேட்டிங் செய்யும்போது தொடர்ந்து பல விக்கெட்டுகளை இழந்து வருகிறோம். பவர்பிளேயில் யார் பந்து வீச வருவார்கள் என்பது குறித்து நாங்கள்   உறுதியாகவோ இல்லை என்று நான் நினைக்கிறேன். முதல் அல்லது இரண்டாவது ஓவரிலேயே விக்கெட்டுகளை இழந்தோம். பவர்பிளேயில் நடக்கும் விஷயங்களைப் பற்றி நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். அனைவரும் ஒன்றாகச் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.