மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உணவு பதப்படுத்தும் துறை இணை அமைச்சராக ஷோபா கரந்த்லாஜே நியமனம் செய்யப்பட்டுள்ளார். பழங்குடியினர் விவகாரத்துறை இணை அமைச்சராக பாரதி பவார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சராக ராஜீவ் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் படேல், ரேணுகா சிங் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து மத்திய அமைச்சர் பதவியை 3 பேரும் ராஜினாமா செய்துள்ளனர்.

மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டாவுக்கு வேளாண் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் ராஜினாமாவை அடுத்து அர்ஜுன் முண்டாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மந்திரி சபையில் இருந்து நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் சிங் படேல் மற்றும் ரேணுகா சிங் சருதா ஆகியோரின் ராஜினாமாவை ஜனாதிபதி திரௌபதி முர்மு உடனடியாக ஏற்றுக்கொண்டார்.