நம்மில் அனைவரிடமும் வங்கி கணக்கு கட்டாயம் இருக்கும். நிறைய பேரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கு கூட இருக்கலாம். வங்கி கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை பார்ப்பதற்கு ஏராளமான வசதிகள் வந்துவிட்டது. இதற்காக நாம் வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டியதில்லை. கையில் உள்ள செல்போன் மூலமாக பேலன்ஸ் பார்த்து விடலாம். இதற்காக ஆன்லைன் பேங்கிங் வசதியும் கையில் ஸ்மார்ட் போன் இருந்தால் மட்டும் போதும். ஆனால் ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்.

ஏனெனில் இன்னமும் ஏராளமானவர்கள் பட்டன் போன் தான் வைத்திருக்கிறார்கள். நெட் பேங்கிங் மூலமாக பேலன்ஸ் பார்க்க முடியாது. எனவே நாம் வங்கி கணக்கு இருப்பை எஸ்எம்எஸ் மூலமாக அறிந்து கொள்ளலாம். உங்களுடைய பட்டன் ஃபோனில் உள்ள மெசேஜ் மூலமாக வங்கி கணக்கில் எவ்வளவு இருப்பு தொகை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதற்கு போனில் இருந்து ஒரு எண்ணை டயல் செய்ய வேண்டும். அதன் பிறகு மெசேஜ் மூலம் பேலன்ஸ் தொடர்பான தகவல் கிடைத்துவிடும்.