மத்திய பிரதேசம்- சத்தீஸ்கர் எல்லையில் உள்ள வனப்பகுதியில் நக்சல் தடுப்பு படையினரும் உள்ளூர் போலீசாரும் நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலை போலீசார் வனப்பகுதியில் பதுக்கி இருந்த நக்சல்களுடன் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் 3 பெண் நக்சல்கள் சுட்டு கொலை செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அவர்கள் தங்கி இருந்த இடத்திலிருந்து ரைப்பிள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. துப்பாக்கி சூட்டில் சிலர் தப்பித்து சென்றுள்ளனர். அவர்களை பிடிக்க காவல்துறையினர் 12 குழுக்களாக பிரிந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.