பொதுவாகவே இந்தியாவில் பண்டிகை காலங்களில் மது விற்பனை களைகட்டி வருவது வழக்கம். அந்த வகையில் கிறிஸ்மஸ் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் மது விற்பனை நடைபெற்றதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. அதாவது வார இறுதி நாட்களுடன் தொடர்ச்சியாக கிறிஸ்துமஸ் பண்டிகை வந்த காரணத்தால் அந்த மூன்று நாட்களுமே அதிக அளவில் மது விற்பனை நடைபெற்றது .

அந்த வகையில் கேரளாவில் டிசம்பர் 22, 23, 24 ஆகிய நான்கு நாட்களில் மட்டுமே 154.78 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 144.91 கோடி மது விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வருடம் கூடுதலாக 10 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.