உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண் தன் கணவர் மற்றும் அவருடைய நண்பர்கள் மீது பரபரப்பு புகாரினை கொடுத்துள்ளார். அதாவது கடந்த 3 வருடங்களாக தன் கணவர் அவருடைய நண்பர்களோடு உடலுறவு கொள்ள வேண்டும் என்று தன்னை துன்புறுத்துவதாகவும் அவர்கள் தன்னை பலாத்காரம் செய்யும்போது அதனை வீடியோவில் பார்த்து ரசிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்காக தன் கணவருக்கு அவர்கள் பணம் அனுப்பி வரும் நிலையில் அவர்கள் அனுப்பும் வீடியோவையும் என் கணவர் பார்க்கிறார்.

அந்தப் பெண்ணுக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணமான நிலையில் 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருக்கிறார்கள். தற்போது அந்தப் பெண் ஒரு மாத கர்ப்பிணியாக இருக்கிறார். அந்த பெண்ணின் கணவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வரும் நிலையில் ஒருமுறை அவர் வீட்டிற்கு வரும்போது அந்த இருவரையும் அழைத்து வந்துள்ளார். அப்போது அவர்கள் அந்த பெண்ணின் கணவர் கண் முன்னே பலாத்காரம் செய்த நிலையில் தற்போது அவர்கள் வீட்டின் அருகே இருந்து அடிக்கடி பலாத்காரம் செய்து வீடியோவாக எடுக்கிறார்கள்.

இது பற்றி என் கணவனிடம் கூறிய போது அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிவிட்டு அமைதியாக இரு. இல்லையெனில் விவாகரத்து செய்து விடுவேன் என்று மிரட்டினார். என்னுடைய குடும்ப நலனுக்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் இவ்வளவு நாள் அந்த விஷயத்தை வெளியே சொல்லவில்லை. ஆனால் இனியும் என்னால் அமைதியாக இருக்க முடியாது என்பதால் புகார் கொடுத்துள்ளேன் என்றுள்ளார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதி கொடுத்துள்ளனர்.