தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த அனுஷ்கா நடிப்பில் கடைசியாக 2020-ல் சைலன்ஸ் திரைப்படம் ரிலீஸ் ஆகியது. இதையடுத்து அவருக்கு உடல் எடை கூடிய காரணத்தால் பட வாய்ப்புகள் நின்றுபோனது. பிரபாசை அனுஷ்கா காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகப்போவதாகவும் சொல்லப்பட்டது.
எனினும் காதலிக்கவில்லை என இருவருமே மறுத்தனர். இந்நிலையில் அனுஷ்காவுக்கு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி எனும் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. இதன் சூட்டிங் சென்ற சில மாதங்களாக மும்முரமாக நடைபெற்றது. 3 வருடங்களுக்கு பின் அனுஷ்கா நடிக்கக்கூடிய திரைப்படம் என்பதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படத்தின் டிரைலர் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.