தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இந்த படத்திற்கு பிறகு பாலிவுட்டில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா அங்கு முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். அமெரிக்க பாடகர் நிக்ஜோன்ஸ் என்பவரை நடிகை பிரியங்கா சோப்ரா காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஹாலிவுட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த கால பழைய நினைவுகள் குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு பேட்டியில் பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் பள்ளி படிப்புக்காக அமெரிக்கா சென்ற புதிதில் பல பிரச்சனைகளை எதிர் கொண்டேன். ஒவ்வொரு நாளையும் மிகவும் பயந்து கொண்டே கழித்தேன்.
உணவு பண்டங்களை வாங்கிவிட்டு யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக பாத்ரூமுக்குள் சென்று சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்கு செல்வேன். அப்போது எனக்கு மிகவும் பயமாக இருந்ததால் அந்த நாட்களில் நான் யாருடனும் எதையும் பகிரவில்லை. சுமார் 4 வாரங்கள் அங்கு நடந்த அத்தனை விஷயங்களையும் கவனித்த பிறகுதான் எனக்குள் இருந்த பயம் போனது. பள்ளியில் படிக்கும் இதர மாணவர்களுடன் நட்பாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னை நான் மாற்றிக் கொண்டேன். டேட்டிங் செல்வதற்கு நைட் பார்ட்டி செல்வதற்கு போன்றவற்றிற்கு என் பெற்றோர் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் அவர்கள் சேர்ந்து எங்கும் செல்ல மாட்டேன். மேலும் எனக்குள் இருந்த அனைத்து பயங்களையும் நீக்கிவிட்டு தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்று கூறினார்.