“மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்து வரும் வேளையில், குவைத் சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 1 (T1) மீது ஜூன் 3 அன்று நடத்தப்பட்ட கொடூர ட்ரோன் தாக்குதலின் பகீர் சிசிடிவி  காட்சிகள் வெளியாகி ஒட்டுமொத்த உலகையே அதிரவைத்துள்ளன.

ஈரானின் இந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் அநியாயமாக இந்தியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்; மேலும் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளனர்.

குவைத் சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் வெளியிட்டுள்ள இந்தக் காணொளியில், தாக்குதல் நடந்த அந்தத் துல்லியமான தருணமும், அதைத் தொடர்ந்து முனையமே புகைக்காடாக மாறி மக்கள் அலறியடித்து ஓடும் நெஞ்சை பதறவைக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பழிவாங்கவே ஈரான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்காவின் ‘சென்ட்காம்’ (CENTCOM) மற்றும் குவைத் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ள நிலையில், ‘தங்கள் மீது பழியில்லை, அமெரிக்காவின் ஏவுகணை இடைமறிப்பான் பழுதடைந்ததே காரணம்’ என ஈரான் கைவிரித்துள்ளது.

இந்த விவகாரத்தால் கோபமடைந்த குவைத், 2 ஈரானிய தூதர்களை 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற அதிரடி உத்தரவிட்டுள்ளதால் வளைகுடாப் பகுதியில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.”

“>