ஹரியானா மாநிலத்தில் ஒரு 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது நுஹ் என்ற மாவட்டத்தில் வீட்டின் அருகே ஒரு சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அந்த சிறுமி திடீரென மாயமானார். சிறுமியை பெற்றோர் பல இடங்களில் தேடி அலைந்த நிலையில் எங்கும் காணாததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அந்தப் புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இளைஞர் ஒருவர் சிறுமியை அழைத்து சென்றது தெரிய வந்தது. அந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கை கால்கள் உடைந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் சிறுமி சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார். மேலும் பிஞ்சு குழந்தையை கதற கதற சீரழித்து கை கால்களை உடைத்து கொடூரமாக கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.