மும்பையில் ஒரு தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு துப்புரவு பணியாளராக அனீஷ் கைலாஷ் சவுக்கான் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திடீரென தலையில் அடி ஏற்பட்டதால் செயின்ட் சார்ஜ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேலாக மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் இருந்துள்ளனர்.

கடைசியில் அங்கிருந்த மருத்துவ பயிற்சியாளர் ஒருவர் அனீஷுக்கு சிகிச்சை அளிக்க சென்றார். ஆனால் அவர்  அதற்குள் பரிதாபமாக இறந்து விட்டார். இதற்குக் காரணம் மருத்துவமனையின் அலட்சியம்தான் என்று கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.