
மகாராஷ்டிர மாநிலம், பர்பானி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குண்டலிக் உத்தம் காலே – மைனா குண்டலிக் காலே தம்பதி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் சமீபத்தில் மைனா மூன்றாவது பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் உத்தம் காலே தனது மனைவியின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். மைனாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உதவ முயற்சித்துள்ளனர். முடியாமல் போகவே தீக்காயங்களுடன் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால் சிகிச்சை தொடங்குவதற்கு முன்பே மைனா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மைனாவின் சகோதரி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.