நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மாத்திரை மற்றும் மருந்துகளை மத்திய மற்றும் மாநில அரசுகளின் மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்கின்றன. அந்த ஆய்வில் போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன்படி காய்ச்சல், சர்க்கரை நோய் மற்றும் இரும்பு சத்து உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 27 மருந்துகள் தர மற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அவ்வாறு தரம் அற்றவையாக கருதப்பட்ட மருந்துகளின் விவரங்கள் அனைத்தும் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியத்தின் cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.