மான்டிநீக்ரோ நாட்டைச் சேர்ந்த கோல் கீப்பர் மதிஜா சர்கிக்(26)  மில்வால் எப்.சி. கால்பந்து கிளப்புக்காக விளையாடியவர். இவர் இன்று காலை உயிரிழந்ததாக கிளப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இவருடைய மரணத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இவருடைய மரணம் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.