சென்னை திருவல்லிக்கேணியில் பிலால் பிரியாணி தனியார் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி அன்று இந்த கடையில் விற்கப்பட்ட பீப் சவர்மாவை சாப்பிட்ட 25-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அதிகாரிகள் அந்த கடைக்கு சீல் வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.