
பிரிட்டனின் ஒரு அங்கமாக திகழும் ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஓவர் தீவு 1.50 கோடிக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தீவின் விற்பனையை கையாளும் கால்பிரைத் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீவு தலைநகர் எடின்பர்க்கில் இருந்து 100 மைல் தொலைவிலும், லண்டனில் இருந்து 350 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த தீவில் பெரிய கருப்பு முதுகு கொண்ட காளைகள் இருப்பதோடு ராக் சீ லாவண்டர் மற்றும் நறுமணமுள்ள ஆர்கிட் போன்ற அரிய தாவரங்களும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.