ஆவடி அடுத்த பொத்தூர் பகுதியைச் சேர்ந்த சாந்த்குமார் (45) என்ற கருப்பசாமி கோவில் பூசாரி, குறி சொல்வதாகக் கூறி 24 வயது இளம்பெண்ணை ஏமாற்றி மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே இருமுறை திருமணங்கள் ஆனதை முற்றிலும் மறைத்து, ஆன்மீகப் போர்வையில் அந்த இளம்பெண்ணை அவர் வளைத்துப் போட்டுள்ளார்.
இந்த விவகாரம் தற்போதைய சூழலில் அம்பலமானதைத் தொடர்ந்து, பூசாரி சாந்த்குமாரின் முதல் மனைவி காவல் நிலையத்தில் கணவரின் இந்த மோசடித் திருமணம் குறித்துப் பரபரப்புப் புகார் ஒன்றை அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட முதல் மனைவி அளித்த புகாரின் பேரில் பூசாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டன. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
