ஜம்மு & காஷ்மீரில் மாநிலத்தில் இந்தியாவின் முதல் Tele-MANAS உரையாடு மென்பொருளானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  துயரத்தில் உள்ளவர்களுடன் உடனடி உரையாடலை மேற்கொள்ளும் வகையில் கடந்த வருடம்  இந்த மென்பொருள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரமும் Tele-MANAS ஹெல்த் சேவைகளுக்காக இலவச எண் 14416 தொடர்புகொள்ளலாம்.

இந்த முன்னெடுப்பானது, சுகாதார நல ஆலோசகர்கள், மருத்துவம் சார்ந்த உளவியலாளர்கள் மற்றும் ஆலோசகர் சேவையினை 24 மணி நேரமும் பெறுவதை உறுதி செய்யும். இந்த ஆண்டில், காஷ்மீரில் தான் Tele-MANAS மையத்திற்கு அதிக எண்ணிக்கையிலான துயரம் தொடர்பான உரையாடலுக்கான அழைப்புகள் பதிவாகியுள்ளது.