லக்னோவில் உள்ள சார்பாக் ரயில் நிலையத்தில் அவத் அசாம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளின் அவல நிலையை வெளிப்படுத்தும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. இந்த வீடியோவில், ஒரு பயணி ராஜஸ்தானில் இருந்து பயணம் செய்து, கடந்த 24 மணி நேரமாக ரயிலில் நெரிசலில் சிக்கியிருப்பதாகக் கூறுகிறார். அவரால் இடம் நகர முடியவில்லை, கழிவறைக்குச் செல்ல முடியவில்லை, மேலும் தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை என்று தெரிவிக்கிறார்.
அரசு பயணிகள் வசதியாக பயணிக்கிறார்கள் என்று கூறுவதை நிருபர் சுட்டிக்காட்டியபோது, அந்த பயணி “இதுதான் வசதி” என்று கிண்டலாக பதிலளிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளமான X-இல் பரவி, சில மணி நேரங்களில் 30,700-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். ஒருவர், “12,000 சிறப்பு ரயில்கள் என்று சொல்கிறார்கள், ஆனால் பயணிகளுக்கு கண்ணியமே இல்லை.
Onboard Awadh Assam Express, a passanger tells @ashharasrar at Lucknow's Charbagh that he has been sitting in this overcrowded coach for 24 hours now. Hasn't been to the washroom since. "I fear drinking water." pic.twitter.com/7BF5z19uZX
— Piyush Rai (@Benarasiyaa) October 24, 2025
பயத்தில் மக்கள் தண்ணீர் கூட குடிக்காமல் இருக்கிறார்கள். இதுதான் அம்ரித் கால் எக்ஸ்பிரஸ்!” என்று கூறியுள்ளார். மற்றொரு பயனர், “24 மணி நேரமாக இடத்தை விட்டு நகர முடியவில்லை… இதை என்னவென்று சொல்வது? இருக்கையில் கைது என்று கூறலாமா?” என்று கேலியாகக் கருத்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ ரயில்வேயின் உண்மையான நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
