
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஆர்யா. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான காதர் பாட்ஷா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக சார்பட்டா பரம்பரை 2, பாஸ் என்கிற பாஸ்கரன் 2 உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் ஆர்யா கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னுடன் ஒன்றாக நடித்த சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து இந்த தம்பதிகளுக்கு தற்போது ஆர்யானா என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் தங்கள் மகளின் இரண்டாவது பிறந்த நாளை ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதியினர் கொண்டாடினர். வீட்டில் மிகவும் சிம்பிளாக அலங்காரம் செய்து பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இது தொடர்பாக சாயிஷா வெளியிட்டுள்ள வீடியோவில் இரண்டு என்ற எண்ணில் வடிவமைக்கப்பட்டு இருந்த மெழுகுவர்த்தியை எடுத்து காட்டியுள்ளார். அந்த மெழுகுவர்த்தியானது தனது இரண்டாவது பிறந்த நாளில் தனது தாயார் வழங்கியது என்றும் 24 ஆண்டுகள் பத்திரமாக வைத்து தற்போது தனது மகளின் பிறந்தநாளுக்கு இதனை பயன்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சாயிஷா இரண்டு வயதாக இருந்தபோது அவரின் அம்மா வாங்கிய பிறந்தநாள் கிப்ட் தற்போது சாயிஷாவின் மகளின் இரண்டாவது பிறந்தநாளில் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.