திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அப்போது பேசிய அவர், “கூட்டணி கட்சிகளில் ஒரு சிலருக்கு நம் மீது அதிருப்தி இருக்கலாம், அவர்கள் தேவையற்ற கருத்துகளைக் கூறி கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்க முயல்வார்கள்; அத்தகைய சூழ்ச்சிகளுக்குத் திமுகவினர் யாரும் இடம் கொடுத்துவிடக் கூடாது” என்று மிகத் தெளிவாக அறிவுறுத்தினார்.
மேலும், தேர்தல் நெருங்கிவிட்டதால் இனி நம்முடைய ஒரே இலக்கு வெற்றியாக மட்டுமே இருக்க வேண்டும் என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி தொடர்பான முடிவுகளைத் தான் கவனித்துக் கொள்வதாகவும், கட்சியினர் அனைவரும் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் முதலமைச்சரே நேரடியாகப் போட்டியிடுவதாகக் கருதி, முழுமையான ஈடுபாட்டுடன் தேர்தல் களப்பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கட்டளையிட்டார்.
