சீனாவில் உள்ள ஒரு பகுதியில் ஷு வாங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பல் பிரச்சனையின் காரணமாக ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் யுவான் பற்களை பிடிங்கி விட்டு புதிய பற்களை பொருத்துவது நல்லது என்று கூறியிருக்கிறார். அதற்கு ஷுவாங்கும் ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சையில் அவரது வாயிலிருந்து மொத்தம் 23 பற்கள்  எடுக்கப்பட்டு, அதன் பின் 12 பற்கள் பொருத்தப்பட்டன.

இதையடுத்து வீட்டிற்கு சென்ற அவருக்கு சில நாட்களில் அவரது  உடல்நிலை மோசமாகி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். பல் பிடுங்கி 13 நாளிலேயே உயிரிழந்துள்ளார். ஆனால் அந்த மருத்துவர் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.

அவரது மகன், தன் தந்தை இவ்வளவு சீக்கிரம் இறந்து விடுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை, அவருக்கு வாங்கி கொடுத்த புதிய காரை கூட அவர் ஓட்டவில்லை. அவரது பல் சிகிச்சைக்காக ஒரு பல்லுக்கு ரூபாய் 17,000 செலவு செய்தும் பலனில்லை என்று கூறினார்.