இந்தியாவில் 23 நாய் இடங்களை விற்கவோ இறக்குமதி செய்யவோ விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த 23 நாய் இனங்கள் தற்போது இந்தியாவில் வளர்க்கப்பட்டு வந்தால் கருத்தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு கருணை கொலைக்கு ஈடானது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. தோசா இனு, ஃபிலா பிரேசிலிரோ, அமெரிக்க புல்டாக், கங்கல், காகசியன் ஷெப்பர்ட் உள்ளிட்ட 23 வகை நாய்கள் தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.