கடந்த 2003 ஆம் ஆண்டு சக்தி வாய்ந்த சூரிய புயலுக்கு அடுத்ததாக 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பூமியை தாக்கிய சூரிய புயலால் அடுத்து பூமியில் நடக்கப் போகும் மாற்றங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். 2003 ஆம் ஆண்டு வந்த சூரிய புயலுக்கு பின்னர் தற்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு சூரிய புயல் பூமியை தாக்கியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு சக்தி வாய்ந்த சூரிய புயல் பூமியை தாக்கிய போது ஸ்வீடன் முழுவதும் மின்தடை ஏற்பட்டது.

அதுமட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்காவிலும் மின்சார உள் கட்டமைப்பு சேதம் அடைந்ததாக கூறுகின்றனர். இந்த முறை சூரிய புயலால் அமெரிக்கா அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் மிகப்பெரிய சூரிய புயல் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் வரக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இது போன்ற சூரிய புயலுக்கு மக்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.