2030 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சமாக வாய்ப்புள்ளதாக நகை விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, தங்கம் வாங்குவதற்கு மக்கள் மத்தியில் அதீத ஆர்வம் உள்ளது. அட்சய திருதியை நாளில் மட்டும் 25 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளது. இதேநிலை தொடரும் என்பதால் 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் என்ற அளவில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தியை மக்கள் மத்தியில் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.