தமிழக வெற்றி கழக அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதற்காக கோவையில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து திருச்சி, வேலூர், தர்மபுரி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களிலும் பூத்த கமிட்டி மாநாடு நடத்த விஜய் முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில் அவர் நடித்து வரும் கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டது. எனவே இனி முழு வீச்சில் தமிழக முழுவதும் கட்சி வளர்ச்சி பணிகளை முன்னெடுக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்துவதற்கான பணியில் அக்கட்சியின் தலைவர் இறங்கியுள்ளார். அதாவது 42 நாட்கள் தொடர் மக்கள் சந்திப்பில் விஜய் ஈடுபட இருக்கிறார்.

ஜூன் 2-வது வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து இந்த பயணம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருச்சி அல்லது மதுரையிலிருந்து இதனை தொடங்கலாமா என்று விஜய் யோசித்து வருகிறார். இதற்கிடையில் அக்கட்சியின் தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதில் கட்சி நிர்வாகிகளிடம் கோஷ்டி பூசல் எதுவும் இருக்கக்கூடாது. அப்படி ஏதாவது இருந்தால் கண்டிப்பாக அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள். நமது இலக்கு 2026 என்பதை மறந்து விடாதீர்கள். இலக்கை நோக்கி பயணிப்போம். நம்மை நோக்கி வரும் எதிர்ப்பு கணைகளை பற்றி கவலைப்படாதீர்கள். விமர்சனங்களுக்கு பதில் கொடுத்து நேரத்தை வீணாக்க வேண்டாம். நமக்கு இலக்கு மட்டும்தான் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது, தேர்தலுக்கு குறைவான காலமே இருக்கிறது. தற்போது எங்களுக்கு வார்டு மாநாடு கட்சி ஆலோசனைக் கூட்டம் என்று பணிகள் நிறைய இருக்கிறது. சென்னையை தாண்டி எங்கள் தலைவரின் குரல் கிராமங்களிலும் ஒழிக்க இருக்கிறது. இந்த மக்கள் சந்திப்பை திருப்புமுனை சந்திப்பாக மாற்றி காட்டுவோம் என்றும் கூறியுள்ளனர்.