தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில், நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சி நிர்வாகிகளுடன் தமிழக காங்கிரஸ் கிராம கமிட்டிகளை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் எம்எல்ஏக்கள், அணி நிர்வாகிகள், கட்சி மாநில நிர்வாகிகளிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் சிலர் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதற்கும், கூடுதல் எண்ணிக்கையில் இடம் கேட்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. குறைந்தபட்சம் 2016 ஆம் ஆண்டு நடத்த சட்டமன்ற தேர்தலில் நாம் போட்டியிட்ட 41 இடங்களில் ஆவது கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அதேபோன்று அணி தலைவர் கூட்டத்தில் பேசிய சிலர் 2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் இடங்களை கேட்டு  பெறுவதுடன் ஏற்கனவே எம்எல்ஏவாக இருப்பவர்களுக்கு மட்டுமில்லாமல் புதியவர்களுக்கும் எம்.எல்.ஏ சீட் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.