நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காது. தற்போது 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளேன்‌. மீதமுள்ள தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்பிறகு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்று தகவல் வெளியாகும் நிலையில் தற்போது கார் பந்தயம் நடத்துவதற்கு மட்டும் எங்கிருந்து நிதி கிடைத்தது என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் முன்னதாக விஜயுடன் சீமான் கூட்டணி வைக்கப் போவதாக தகவல் வெளியான நிலையில் செப்டம்பர் 22 ஆம் தேதிக்கு பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பை விஜய் வெளியிடுவார் என முன்னதாக சீமான் கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து ‌ விக்கிரவாண்டியில்  நடைபெறும் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டில் கலந்து கொள்வீர்களா என சீமானிடம் கேட்கப்பட்ட நிலையில் நிச்சயம் நான் அதில் கலந்து கொள்ள மாட்டேன் எனவும் என்னை அழைக்கக்கூடாது என தம்பி விஜயிடம் கூறி விடுவேன் என்றும் கூறினார். மேலும் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி அமைக்க போவதாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது சீமான் திட்டவட்டமாக அதனை மறுத்து நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.