தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் பாஜகவின் பி டீம் தான் நடிகர் விஜய் என்று திருச்சி சூர்யா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு பேட்டி கொடுத்த நிலையில் அது தொடர்பான வீடியோவை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில்  பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் திருச்சி சூர்யா பேசியதாவது, பாஜக கட்சி எப்போதும் தற்போதைய அரசியல் பற்றி சிந்திக்காது. வருங்காலத்தை பற்றி தான் யோசிப்பார்கள். தற்போது கூட பார்த்தால் பாஜக மாநில தலைவர்களாக தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் சிபிஎம் ராதாகிருஷ்ணன்  ஆகிய மூத்த தலைவர்களின் நியமிக்கலாம். ஆனால் அவர்களை ஏன் கையில் எடுக்கவில்லை என்றால் அவர்கள் தற்போது நியமிக்கும் ஒரு ஆளை வைத்து 25 வருடம் மற்றும் 30 வருடங்களுக்கு அரசியல் பிளானை திட்டமிடுவார்கள்.

தற்போது ஒரு பிரதமர் வேட்பாளரை நியமித்தால் அவர் 15 வருடம் ஆட்சியில் இருக்க வேண்டும். ‌ இதேபோன்று மற்றொரு பிரதமர் வேட்பாளரை நியமிக்கும் போது அவர் அடுத்து 15 வருடம் ஆட்சியில் இருக்க வேண்டும். தற்போது விஜய்யை இறக்கியது கூட பாஜகவின் திட்டம் தான். ஆனால் விஜய் வைத்து இப்போதே அவர்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அப்படி செய்யவில்லை. 2026 ஆம் ஆண்டில் விஜய் எதிர்க்கட்சியாக மாறுவார். 2031 இல் தான் விஜய் தமிழ்நாடு முதல்வர் ஆவார். அப்போது விஜய் கண்டிப்பாக பாஜகவுடன் கூட்டணி வைப்பார். இதுதான் பாஜகவின் திட்டம். இதனை மனதில் வைத்து தான் பாஜக விஜயை அரசியலில் களமிறக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் போகப்போக பாஜகவின் பீ டீம் தான் விஜய் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று அவர் கூறியுள்ளார்.