தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திமுகவை விமர்சிக்கும் நிலையில் பாஜகவை கூட மறைமுகமாக விமர்சிக்கிறார். அதே சமயத்தில் அதிமுகவை பற்றிய அவர் விமர்சிக்கவில்லை. இது தொடர்பாக ‌ எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது அதிமுகவை எப்படி விஜயால் விமர்சிக்க முடியும். மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்திய கட்சி அதிமுக மட்டும் தான். அதனால்தான் விஜய் விமர்சனம் செய்யவில்லை என்றார். இந்நிலையில் நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் வருவதற்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கிறது. அதனால் தற்போதைக்கு கூட்டணி பற்றி தெரிவிக்க முடியாது. தேர்தல் சமயத்தில் தான அது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறினார். மேலும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று விஜய் கூறிய நிலையில் அதிமுகவை பற்றிய ஒரு விமர்சிக்காததால் வருகிறார் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.