2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் இப்போதிலிருந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களை சந்தித்து அவர்களது குறைகளை தீர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பத்தை கேட்டறிந்து வருகிறார்.
அவர்கள் விருப்பப்படி பட்டியலை தயாரித்து மேலிடத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளார். அந்த வகையில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை தொடர்பு கொண்டு பேசியபோது சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என அண்ணாமலை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதற்கிடையே தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னையில் உள்ள ஒரு தொகுதியிலும், சரத்குமார் விருதுநகரிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
